ஹோட்டல்களுக்கு புதிய கொரோனா கட்டுப்பாடு: மீறினால் சிறைத் தண்டனை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 16, 2021

ஹோட்டல்களுக்கு புதிய கொரோனா கட்டுப்பாடு: மீறினால் சிறைத் தண்டனை!

ஹோட்டல்களுக்கு புதிய கொரோனா கட்டுப்பாடு: மீறினால் சிறைத் தண்டனை!]





கொரோனா பரவல் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராத காரணத்தினால், பிரான்ஸ் அரசு அதனுடைய கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்காமல் அப்படியே வைத்துள்ளது. இதனிடையே, பொதுமக்கள் தடுப்பூசியை கட்டாயம் போட்டுக் கொள்ளும் பொருட்டு புதிய விதிகளை பிரான்ஸ் அரசு விதித்தது.

அதன்படி, தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும், கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் பெற்றவர்களுக்கு மட்டுமே சுகாதார அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது. இந்த சுகாதார அனுமதிச் சீட்டு இல்லாத பட்சத்தில் மக்கள் மீது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்துள்ளார். அதாவது, உணவகங்கள், கஃபேக்கள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கும் செல்லும்போது, இந்த சுகாதார அனுமதி சீட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகள் வருகிற 21ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், உணவகங்கள், கஃபேக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நாட்டில் உள்ள உணவகங்கள், கஃபேக்களுக்கு வருவோரிடம் சுகாதார அனுமதி சீட்டு உள்ளதா என்பதை அந்த கடையில் இருக்கும் ஊழியர்கள் பரிசோதிக்க வேண்டும்

இந்த சான்றிதழ் உள்ளவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும், அப்படி இதை மீறி செயல்பட்டால், 45 ஆயிரம் யூரோ அபராதமாக விதிக்கப்படுவதுடன், ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் புதிய மசோதா உருவாகியுள்ளது. இந்த மசோதா வருகிற 19ஆம் தேதி நடைபெறவுள்ள பாதுகாப்பு கவுன்சில் அமர்வில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதன்பின்னர், நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, வருகிற ஆக்ஸ்ட் மாதம் முதல் இந்த புதிய சட்டம் அமலுக்கு வர அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. உணவகங்கள், கஃபேக்களுக்கு மட்டுமல்லாமல் சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad