இலவச பஸ் பயணமும், ஏமாற்றும் திமுக அரசும்; கட்டம் கட்டிய அதிமுக! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 21, 2021

இலவச பஸ் பயணமும், ஏமாற்றும் திமுக அரசும்; கட்டம் கட்டிய அதிமுக!

இலவச பஸ் பயணமும், ஏமாற்றும் திமுக அரசும்; கட்டம் கட்டிய அதிமுக!


மிழகத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு டிக்கெட் கிடையாது என்று திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்திருந்தது. சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றியை பெற்றது. இதையடுத்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திமுக, அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் கிடையாது. வெள்ளை நிற பேருந்துகளில் மட்டும் தான் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவித்தது.

எங்கே வெள்ளை நிற பேருந்துகள்?

இது மக்களை ஏமாற்றும் மோசடி வித்தை என்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ’நமது அம்மா’வில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதாவது, சாலைகளில் அப்படிப்பட்ட வெள்ளை நிற பேருந்துகளை எப்போதாவது ஒன்றை இயக்கி மக்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது. வெள்ளை நிற பேருந்து எப்போது வரும் என்று பேருந்து நிறுத்தங்களில் பெண்கள் காத்திருந்து நேரம் வீணாவது தான் மிச்சம்.

இது ஒருபக்கம் என்றால், அந்த வெள்ளை நிற பேருந்துகளில் விவரம் தெரியாமல் ஏறுகிற ஆட்களிடம் கட்டண வசூலிப்பு நடத்தி கல்லா கட்டுகிறது ஒரு கும்பல். அப்படியொரு சம்பவம் சேலத்தில் நிகழ்ந்து அது செய்தியாகவும் வெளிவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பார்த்தீங்களா திமுக ஆட்சியை

வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை வெள்ளை நிற பேருந்தில் ஏற்றி, அவர்களிடம் பேருந்து ஊழியர்கள் கட்டணங்கள் வசூலித்து அதனை தங்கள் கால் டவுசர் பைக்குள் அமுக்கி கொண்ட விவகாரம் சேலத்தில் நடந்துள்ளது. இதனை பொதுமக்களே கண்டறிந்து பிரச்சினையை வெளிக்கொண்டு வந்துள்ளனர். இப்படித்தான் பெண்களுக்கு இலவச பயணச் சலுகை வழங்கப்படுகிறது.

அது சரி, நிர்வாகம் செய்வோரை பொறுத்து நீதியின் மாண்புகள் போற்றப்படும். ஆள்வோரை பொறுத்து அக்கிரமத்தின் அளவு அமையும் என்பார்கள். தற்போது சொல்லுங்கள். விடியல் ஆட்சியின் நிர்வாகத்திறன் எவ்வளவு வீரியமானது என்று? எனச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad