பத்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 21, 2021

பத்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

பத்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயமுத்தூர் தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேகமாக வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
ஜூலை 23ஆம் தேதி நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

ஜூலை 24ஆம் தேதி நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.ஜூலை 25ஆம் தேதி நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சி (நீலகிரி) 5, பந்தலூர் (நீலகிரி) 4, ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), சின்னக்கல்லார் (கோவை) தலா 3, சோழிங்கநல்லூர் (சென்னை), மாதவரம் (திருவள்ளூர்), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), காஞ்சிபுரம் தலா 2, தொண்டையார்பேட்டை (சென்னை), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), திருப்போரூர் (செங்கல்பட்டு ), நாமக்கல் தலா 1 .

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

வட மேற்கு வங்க கடல் பகுதியில் வரும் 23 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

வங்க கடல் பகுதிகள்:


ஜூலை 21 முதல் 23ஆம் தேதி வரை தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஜூலை 21 முதல் 25ஆம் தேதி வரை தெற்கு வங்க கடல் மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

ஜூலை 21 முதல் 25ஆம் தேதி வரை கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூலை 21 முதல் 25ஆம் தேதி வரை தென் மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு அரபிக்கடல் மற்றும் வடக்கு அரபிக்கடல், பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமெனஅறிவுறுத்தப்படுகிறார்கள்

No comments:

Post a Comment

Post Top Ad