'தலையணை கொடு'... ரெண்டே மாதத்தில் ஒழிகிறது குட்கா விற்பனை: தமிழக அரசு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 22, 2021

'தலையணை கொடு'... ரெண்டே மாதத்தில் ஒழிகிறது குட்கா விற்பனை: தமிழக அரசு

'தலையணை கொடு'... ரெண்டே மாதத்தில் ஒழிகிறது குட்கா விற்பனை: தமிழக அரசு


தமிழகத்தில் குட்கா, பான் விற்பனை பேருக்கு தடை செய்யப்பட்ட பொருட்களாக இருந்தாலும், அதன் விற்பனை பெட்டி கடைகள் முதல் குடோன்கள் வரை பாதிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது போதாதென்று, வட நாட்டைச் சேர்ந்தவர்கள் சிறு சிறு பீடா கடைகளை அமைத்துக்கொண்டு, அதில் குட்கா, பான், மாவா போன்ற பொருட்களை அமோகமாக விற்பனை செய்து வருகின்றனர்.
சொல்லப்போனால், ஒரு பெட்டி கடையில் காட்சிக்காக சில டப்பாக்களை வைத்திருந்தாலும், அவர்களுக்கு குட்கா, பான் மூலமே லாபம் கிடைத்து வருகிறது. குறிப்பாக, தேநீர் கடைகளிலும் டீ விற்பனையை விட குட்கா, பான் விற்பனைகளில்தான் அதிகளவு கல்லா கட்டுகிறது.

மேலும், கூலிப் போன்ற பாக்கெட்டில் ரெடி மேடாக வைத்து விற்பனை செய்வது மளிகை கடைகளிலும் நடக்கிறது. இதனை பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமே அதிக அளவில் வாங்கி பயன்படுத்துகின்றனர். பொது இடத்தில் அதை வாங்கும்போது, தலையணை, பட்டன், பில்லோ போன்ற கோர்டு வோர்டு பயன்படுத்தப்படுகிறது.

கொரோனா காலகட்டத்தில் ஒரு கூலிப்பின் விலை மட்டும் 100 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கள்ள சந்தையில் சரக்குகளை அதிக விலைக்கு விற்பனை செய்வது ஊரறிந்த விஷயம் என்றாலும், மேற்கண்ட போதை பொருட்களின் வியாபாரம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. இதற்கான விலையை விற்பனை செய்பவரே தீர்மானிப்பது என்றாலும் வாடிக்கையாளர் எப்பாடு பட்டாவது அதை அந்த விலைக்கே வாங்கி செல்கின்றனர்.குறிப்பாக, ஊரடங்கு, போலீஸ் ரைடு, லோடு வரவில்லை, தொலைதூரம் சென்று கொள்முதல் செய்துள்ளேன் உள்ளிட்ட காரணங்களை கூறி 20 ரூபாய்க்கு வாங்கிய பொருளை 150 ரூபாய் வரைக்கும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், குட்கா, பான் விற்பனையை இரண்டு மாதங்களில் ஒழிக்க வேண்டும் என்று சுகாதரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துளளார். மேலும், கடைகளில் சென்று குட்கா கொடு என்று கேட்பதில்லை, தலையணை கொடு என கோட் வேர்டு வைத்து வாங்குகின்றனர். இந்த குறியீடெல்லாம் குட்கா விற்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கு மட்டுமே தெரிகிறது என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad