தமிழக அரசின் சிறப்பு பள்ளிகள்; வெளியான சூப்பர் நியூஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 17, 2021

தமிழக அரசின் சிறப்பு பள்ளிகள்; வெளியான சூப்பர் நியூஸ்!

தமிழக அரசின் சிறப்பு பள்ளிகள்; வெளியான சூப்பர் நியூஸ்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஓராண்டாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால் ஆன்லைன், கல்வி சேனல் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு, வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் வீட்டுப் பாடங்கள் அளிக்கப்பட்டு வந்தன. பள்ளிகளுக்கு நேரடியாக வர முடியாத சூழல் நிலவியதால் ஆண்டு இறுதித் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண்களை கணக்கிட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.

சிறப்பு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

இந்த சூழலில் 2021-22ஆம் கல்வியாண்டு தொடங்கி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து ஆன்லைன் மற்றும் கல்வி சேனல் வாயிலாக வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதேபோல் சிறப்பு பள்ளிகளில் எப்போது மாணவர் சேர்க்கை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் நேற்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

யாருக்கெல்லாம் வாய்ப்பு

அதில், தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் பார்வைத்திறன் குறைபாடுடையோர், செவித்திறன் குறைபாடுடையோர் மற்றும் கை, கால் இயக்கத்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் மன வளர்ச்சி குன்றியோருக்கான அரசு நிறுவனம் என மொத்தம் 22 அரசு சிறப்புப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

சிறந்த ஆசிரியர்கள், தரமான கல்வி

இந்தப் பள்ளிகளில் 2021-22ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இங்கு மாணவர்களுக்கு சீருடை, உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளுடன் மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சி பெற்ற தகுதி வாய்ந்த அரசு ஆசிரியர்களைக் கொண்டு தரமான கல்வி வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad