ஜெ.நினைவிடம் கிளம்பிய சசிகலா: இந்த கேள்விகளுக்கு பதில் இருக்கா மேடம்?
சட்டமன்றத் தேர்தலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்ச் மாதம் அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கப் போகிறேன் என அறிவித்தார் சசிகலா. தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு எதிராக வந்துள்ள நிலையில் அதிமுக, அமமுக தொண்டர்கள், நிர்வாகிகளை அலைபேசியில் அழைத்து நலம் விசாரித்து அரசியலில் மீண்டும் களமிறங்கப் போவதாக கூறி வருகிறார்கொரோனா குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள தளர்வுகள் 19ஆம் தேதி காலை வரை அமலில் இருக்கும் நிலையில் அடுத்தக்கட்ட ஊரடங்கு குறித்து தமிழ்நாடு அரசு அறிவிக்க உள்ளது. இந்த சூழலில் அடுத்த வாரம் ஜெ நினைவிடம் சென்று வணங்கிவிட்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் சசிகலா.
எப்போது செல்வார் என்பது உறுதியாகாமல் இருந்த நிலையில் ஜூலை 23ஆம் தேதி அவர் நினைவிடம் செல்லவுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதன்பின்னர் சசிகலா மேற்கொள்ளும் சுற்றுப் பயணத்துக்கு என்ன மாதிரியான வரவேற்பு கிடைக்கும் என விசாரித்தோம்.
ஜெயலலிதாவின் உண்மையானத் தொண்டர்கள் சசிகலாவின் வருகையை எதிர்பார்த்திருப்பதாகவும், அதன் பின்னர் அதிமுகவில் பெரிய மாற்றங்கள் நிகழும் என்றும் சசிகலா ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment