அடேங்கப்பா, இத்தனை மாவட்டங்களிலா? ரவுண்ட் கட்டப் போகும் கனமழை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 9, 2021

அடேங்கப்பா, இத்தனை மாவட்டங்களிலா? ரவுண்ட் கட்டப் போகும் கனமழை!

அடேங்கப்பா, இத்தனை மாவட்டங்களிலா? ரவுண்ட் கட்டப் போகும் கனமழை!


கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தென்மேற்குப் பருவமழை மிகவும் வலுவிழந்து காணப்பட்டது. குறிப்பாக ஜூன் 1 முதல் ஜூலை 8ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 47 சதவீதம் பற்றாக்குறையாக பருவமழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக பாலக்காடு மற்றும் திருவனந்தபுரத்தில் 62 சதவீத அளவிற்கு மழைப்பொழிவு ஏமாற்றம் அளித்துள்ளது. கோட்டயம் மற்றும் பத்தினம்திட்டாவில் 20 சதவீதமும், மற்ற மாவட்டங்களில் 40-55 சதவீதமும் மழைப்பொழிவு சரிவை சந்தித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு குமரகோமில் 4 செ.மீ, மண்கொம்பு மற்றும் இடுக்கியில் தலா 3 செ.மீ அளவும் மழை பெய்துள்ளது. இந்நிலையில் பருவமழை மீண்டும் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளதால் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்பான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
ஆரஞ்சு எச்சரிக்கை

அதன்படி, இடுக்கி மாவட்டத்தில் இன்றும் (ஜூலை 9), நாளையும் (ஜூலை 10) மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோல் கண்ணூர் மாவட்டத்திலும் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. பாலக்காட்டை தவிர மற்ற மாவட்டங்கள் அனைத்திலும் 7 முதல் 11 செ.மீ வரை மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.தொடர் மழை வெளுத்து வாங்கி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடுக்கி மற்றும் சிறுதோனி அணைகளை அணை பாதுகாப்பு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். மேலும் அரபிக் கடலின் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்தியப் பகுதியில் பலமான காற்று வீசக்கூடும். மணிக்கு 40 - 50 கிலோமீட்டர் முதல் அதிகபட்சமாக 60 கிலோமீட்டர் வரை காற்று வீச வாய்ப்புள்ளது.

எனவே மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு வரும் ஜூலை 12ஆம் தேதி மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் வங்காள விரிகுடாவின் வடமேற்கில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி அடுத்த 5 நாட்களுக்கு மேற்கு மற்றும் கிழக்கு கடலோரப் பகுதிகளில் நல்ல மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

 

No comments:

Post a Comment

Post Top Ad