யாரையும் கட்டாயப்படுத்த மாட்டோம்: வாட்ஸ் அப் உறுதி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 9, 2021

யாரையும் கட்டாயப்படுத்த மாட்டோம்: வாட்ஸ் அப் உறுதி

யாரையும் கட்டாயப்படுத்த மாட்டோம்: வாட்ஸ் அப் உறுதி


புதிய கொள்கையை ஏற்கும்படி பயனாளர்களை கட்டாயப்படுத்த மாட்டோம் என,
வாட்ஸ் அப் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், வாட்ஸ் அப் சமூக வலைதளம், சமீபத்தில் தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான, 'பிரைவசி' கொள்கையில் மாற்றம் செய்வதாக அறிவித்தது. அதன்படி, 'பயனாளர்களின் தகவல்கள், தாய் நிறுவனமான, 'பேஸ்புக்' உடன் பகிர்ந்து கொள்ளப்படும்' என, அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாட்ஸ் அப் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹாரிஸ் சால்வே கூறியதாவது:
புதிய 'பிரைவசி' கொள்கையை, நாங்களாகவே நிறுத்தி வைக்கிறோம். இந்த கொள்கையை ஏற்க வேண்டும் என பயனாளர்களை கட்டாயப்படுத்த மாட்டோம். இதனை ஏற்காதவர்களுக்கு ,வழங்கப்படும் சேவையை குறைக்க மாட்டோம்.தகவல் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வரும் வரை, புதிய கொள்கை குறித்த செய்தியை பயனாளர்களுக்கு காட்டுவோம். இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad