கல்லூரிகள் திறக்கப்படும் தேதி; அமைச்சர் திட்டவட்ட அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 9, 2021

கல்லூரிகள் திறக்கப்படும் தேதி; அமைச்சர் திட்டவட்ட அறிவிப்பு!

கல்லூரிகள் திறக்கப்படும் தேதி; அமைச்சர் திட்டவட்ட அறிவிப்பு!


கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது. இதையொட்டி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொதுமக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அடுத்தகட்டமாக கல்வி நிலையங்கள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக 18 வயதுக்கு மேற்பட்ட உயர்கல்வி கற்கும் அனைத்து மாணவர்களும் ஜூலை 7ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கு தடுப்பூசி முகாம்கள்

இதனை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று துணை முதல்வர் சி.என். அஸ்வத் நாராயண் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டன. தடுப்பூசி போட்டுக் கொள்ள மாணவ, மாணவிகள் ஊக்குவிக்கப்பட்டனர். தற்போது வரை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளைச் சேர்ந்த 65 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டிருக்கின்றனர்.
கல்லூரிகள் திறப்பு எப்போது?

இந்த சூழலில் வரும் 19ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என்று சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. இதுபற்றி விளக்கம் கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ள துணை முதல்வர், கர்நாடக மாநிலத்தில் கல்லூரிகளை திறப்பது பற்றி அரசு எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை.

அரசு சார்பில் விழிப்புணர்வு

தற்போதைய சூழலில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்து வருகிறோம். கல்லூரிகள் திறப்பு குறித்து அனைத்து தரப்பினரின் கருத்துகளை பெற்று, அதன்பின்னரே இறுதி முடிவெடுக்கப்படும். இந்த விஷயத்தில் தடுப்பூசி என்பது முக்கியமானதாக கருதப்படும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad