டோல்கேட் இல்லா டிஜிட்டல் இந்தியா; அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பதில்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 22, 2021

டோல்கேட் இல்லா டிஜிட்டல் இந்தியா; அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பதில்!

டோல்கேட் இல்லா டிஜிட்டல் இந்தியா; அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பதில்!


இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட்கள் மூலம் வாகனங்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமலில் இருக்கிறது. இதில் வசூலிப்பாளர் மூலம் கட்டணம் பெறப்பட்டு வந்த நிலையில் பாஸ்டேக் என்ற டிஜிட்டல் முறைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதன்மூலம் வாகன ஓட்டிகளின் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக கட்டணம் எடுக்கப்பட்டு கால விரயமற்ற பயணம் உறுதி செய்யப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அடுத்த ஓராண்டிற்குள் இந்தியாவில் உள்ள அனைத்து டோல்கேட்களும் அகற்றப்படும்.

சுங்கக்கட்டணம் வசூலிக்கும் நடைமுறை

அதற்கு பதில் ஜிபிஎஸ் முறையின் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றார். அதாவது, கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அப்படியே தான் இருக்கும். தனியாக ஆட்களை நியமித்து வசூல் செய்யும் முறை தான் நீக்கப்படுகிறது. இதே விஷயம் நடப்பு மழைக்கால கூட்டத்தொடரிலும் எதிரொலித்துள்ளது. மக்களவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது பர்தோலி தொகுதி காங்கிரஸ் எம்.பி

பிரபுபாய் நாகர்பாய் வசவா கேள்வி ஒன்றை எழுப்பினார்.

டோல்கேட்கள் முழுவதுமாக அகற்றம்

அதாவது, அடுத்த ஓராண்டிற்குள் அனைத்து டோல்கேட்களும் அகற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டனவா? முழுவதுமாக பாஸ்டேக் முறைக்கு மாறும் நிலை எப்போது வரும்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் அனைத்து வழித்தடங்களையும் பாஸ்டேக் வழித்தடமாக மத்திய அரசு அறிவித்துவிட்டது.

நிதின் கட்கரி அளித்த பதில்

கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி நள்ளிரவு முதல் பாஸ்டேக் டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறையில் தான் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போதைய சூழலில் நாட்டின் கட்டணம் வசூலிக்கும் அனைத்து டோல்கேட்களும் பாஸ்டேக் முறைக்கு மாறிவிட்டன. இதன்மூலம் பாஸ்டேக் பயன்பாடு 80 சதவீதத்தில் இருந்து 96 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜூலை 14ஆம் தேதி நிலவரப்படி 3.54 கோடிக்கும் அதிகமான பாஸ்டேக்குகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறை/ தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது என்பது தொடர்ச்சியாக நடைமுறையாகும். இந்த விஷயத்தில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வர உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1989ன் படி, ஓட்டுநர் மற்றும் அவருக்கு அருகில் இருக்கும் நபர் ஆகியோருக்கு கட்டாய ஏர்பேக் வசதி பொருத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad