சரக்கை ரொம்ப நாளைக்கு கையில வைச்சிருக்காம தள்ளிவிட்டுங்க... டாஸ்மாக் மேனேஜர்களுக்கு ஆர்டர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 21, 2021

சரக்கை ரொம்ப நாளைக்கு கையில வைச்சிருக்காம தள்ளிவிட்டுங்க... டாஸ்மாக் மேனேஜர்களுக்கு ஆர்டர்!

சரக்கை ரொம்ப நாளைக்கு கையில வைச்சிருக்காம தள்ளிவிட்டுங்க... டாஸ்மாக் மேனேஜர்களுக்கு ஆர்டர்!


டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டாஸ்மாக் மண்டல, மாவட்ட மேலாண் இயக்குநர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

அவற்றில் முக்கியமாக கிடங்குகளிலும், மதுபான கடைகளிலும் 90 நாட்கள் கடந்த மதுவகைகள் இருக்க கூடாது, அவற்றை உடனடியாக முன்னுரிமை கொடுத்து விற்பனை செய்ய வேண்டும்.

மேலும் குறிப்பிட்ட மதுவகைகளுக்கு முன்னுரிமை கொடுத்து விற்பனை செய்ய கூடாது, அனைத்து மதுவகைகளையும் விற்பனை செய்ய வேண்டும்.

மதுவகைகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அதிக அளவில் புகார்கள் வருகின்றன. கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதை கட்டுப்படுத்த மாவட்ட மேலாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலாண்மை இயக்குநர்களின் அனுமதியின்றி யாருக்கும் இடமாறுதல் உத்தரவு வழங்ககூடாது. மதுபான கடைகளில் வெளிநபர்கள் இருக்ககூடாது.

எம்பிஏ படித்து மாவட்ட மேலாளர்களாக பணிபுரிபவர்கள் மீது அதிக அளவில் புகார்கள் வருகின்றன. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால், எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட வாய்மொழி உத்தரவுகள் கூட்டத்தில் வழங்கப்பட்டதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad