அடிப்படை சலுகைகூட இல்லை எல்பிஜி தொழிலாளர்கள் சேலத்தில் போராட்டம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 21, 2021

அடிப்படை சலுகைகூட இல்லை எல்பிஜி தொழிலாளர்கள் சேலத்தில் போராட்டம்!

அடிப்படை சலுகைகூட இல்லை எல்பிஜி தொழிலாளர்கள் சேலத்தில் போராட்டம்!


சேலம் மாவட்டத்தில் உள்ள ஜெயமுருகன் கேஸ் சர்வீஸ் நிறுவனத்தின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினம் அருகில் செயல்படும் ஜெயமுருகன் கேஸ் நிறுவனம் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு சிலிண்டர்களை வினியோகம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக இதுவரை இவர்களுக்கு எந்த ஒரு இஎஸ்ஐ பிஎஃப் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படவில்லை. இதற்காக தொழிற்சங்கம் அமைத்து செயல்பட்டதற்காக 6 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் ஐந்து பேர் பணியில் சேர்ந்தனர். ஒருவர் மட்டும் பணியில் சேர்க்காமல் அழகளிக்கப்பட்டு வந்த நிலையில் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து கேஸ் லோடுமேன்களுக்கும்

இஎஸ்ஐ பிஎஃப் உள்ளிட்ட பணப்பலன்களை வழங்க வேண்டும். தொழிற்சங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad