தண்டவாளத்தில் தடுக்கி விழுந்த முதியவர்: நொடி பொழுதில் தப்பிய உயிர்... பதைபதைக்கும் காட்சி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 18, 2021

தண்டவாளத்தில் தடுக்கி விழுந்த முதியவர்: நொடி பொழுதில் தப்பிய உயிர்... பதைபதைக்கும் காட்சி

தண்டவாளத்தில் தடுக்கி விழுந்த முதியவர்: நொடி பொழுதில் தப்பிய உயிர்... பதைபதைக்கும் காட்சி

மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் ரயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை மும்பை டு வாரணாசி செல்லும் விரைவு ரயில் கிளம்பியது. ரயில் சிறிது தூரம் சென்ற நிலையில் முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளார்.
அப்போது, ரயில் வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த முதியவர் தண்டவாளத்தின் நடுவே தள்ளாடி விழுந்துள்ளார். உடனே, ரயில் எஞ்சின் பைலட்ஸ் எமர்ஜென்சி பிரேக்கை அழுத்தி ரயிலை நிறுத்தியுள்ளனர். இருப்பினும் ரயிலின் எஞ்சின் பகுதி சிறிது அளவு முதியவரை தாண்டி நின்றது.

இதில் அதிர்ஷ்டவசமாக அந்த முதியவர் உயிர் பிழைத்தார். ரயில் நின்றதையடுத்து எஞ்சின் பைலட்ஸ் இருவரும் முதியவரை எஞ்சின் இடுக்கில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர். பின்னர் முதியவருக்கு அறிவுரை வழங்கிய ரயில்வே ஊழியர்கள் அவரை நிலையத்தில் அமர வைத்து ஆசுவாசப்படுத்தினர்.

இந்த சம்பவம் வீடியோ எடுக்கப்பட்டு விழிப்புணர்வு காரணமாக ரயில்வே நிர்வாகம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளது. சரியான நேரத்தில் எஞ்சின் பைலட்ஸ் சுதாரித்து கொண்டதால் முதியவர் உயிர் பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad