மீண்டும் ஊரடங்கு! எதற்கெல்லாம் தொடர்கிறது தடை?
தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை மேலும் பல தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், பல்வேறு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து ( புதுச்சேரி நீங்கலாக),
மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது.
திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுது போக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் உள்ளிட்டவற்றுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகளில், 50 பேரும், இறுதிச் சடங்குகளில், 20 பேரும் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment