தி.மு.க., அரசின் நிர்வாகத் திறமையின்மையால் கை நழுவுகிறதா மத்திய அரசு நிதி? - இ.பி.எஸ்., கேள்வி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 24, 2021

தி.மு.க., அரசின் நிர்வாகத் திறமையின்மையால் கை நழுவுகிறதா மத்திய அரசு நிதி? - இ.பி.எஸ்., கேள்வி!

தி.மு.க., அரசின் நிர்வாகத் திறமையின்மையால் கை நழுவுகிறதா மத்திய அரசு நிதி? - இ.பி.எஸ்., கேள்வி!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு வர வேண்டிய மத்திய அரசு நிதி, தி.மு.க., அரசின் நிர்வாகத் திறமை இன்மையால் கை நழுவுகிறதா என, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக, தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்
'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்' என்ற முதுமொழியை நிதர்சனப்படுத்தும் பணியைப் பல ஆண்டுகளாகச் செய்து வந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தற்போதைய சந்தர்ப்பவாத தி.மு.க., ஆட்சியில் செயலிழந்து போய் நிற்பது வேதனைக்குரியதாக உள்ளது.

தற்போதைய நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாகத் திறமை இன்மையால், மத்திய அரசு தமிழகத்துக்குத் தர வேண்டிய 2,000 கோடி ரூபாயைப் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

மத்திய அரசிடம் இருந்து நமக்கு வர வேண்டிய நெல் அரவை மானிய நிலுவைத் தொகையைப் பெற, நுகர்பொருள் வாணிபக் கழகம் துரிதமாகச் செயல்படாமல், தாமதம் செய்வதால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம், மத்திய அரசுக்காக விவசாயிகளிடம் இருந்து நெல்லைக் கொள்முதல் செய்கிறது. இது போல், விவசாயிகளிடமிருந்து வாங்கப்படும் நெல், வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான மற்றும் தனியாருக்குச் சொந்தமான அரவை ஆலைகளில் அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad