தமிழக அரசு கல்லூரிகளில் சேர்க்கை; அதிகாரப்பூர்வ தேதி வெளியானது! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 21, 2021

தமிழக அரசு கல்லூரிகளில் சேர்க்கை; அதிகாரப்பூர்வ தேதி வெளியானது!

தமிழக அரசு கல்லூரிகளில் சேர்க்கை; அதிகாரப்பூர்வ தேதி வெளியானது!

தமிழகத்தில் 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சேர்வதற்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களில் நடப்பு 2021-22 கல்வியாண்டில் சேர கடந்த ஜூலை 26ஆம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், சுமார் 3 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து தரவரிசைப் பட்டியல் எப்போது வெளியாகும், மாணவர் சேர்க்கை தொடங்குவது எப்போது என்று மாணவர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

இறுதி தரவரிசைப் பட்டியல்

இந்நிலையில் மண்டல இயக்குநர்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரணசந்திரன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் அனைத்து ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும். இதையடுத்து கல்லூரிகளின் தகவல் பலகையில் இறுதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட வேண்டும்.

இடஒதுக்கீடு முறை

இதன் அடிப்படையில் இணையவழி மூலமாகவோ, நேரடியாகவோ கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். இந்த கலந்தாய்வில் உரிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். தமிழக அரசின் இடஒதுக்கீட்டை பின்பற்றி ஒவ்வொரு பாடப் பிரிவிலும் தேர்வு பட்டியல், காத்திருப்போர் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். இதனை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

கடைசி தேதி என்ன?

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வரும் 23ஆம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தொடங்கலாம். தேர்வு செய்யப்பட்டது குறித்து மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ், இ-மெயில் மூலம் தெரிவிக்க வேண்டும். கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை பணிகளை வரும் செப்டம்பர் 3ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad