திருப்பதி பக்தர்களுக்கு குட் நியூஸ்: உடனே இதை பண்ணுங்க! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 24, 2021

திருப்பதி பக்தர்களுக்கு குட் நியூஸ்: உடனே இதை பண்ணுங்க!

திருப்பதி பக்தர்களுக்கு குட் நியூஸ்: உடனே இதை பண்ணுங்க!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300க்கான டிக்கெட் ஆன்லைனில் நேற்று வெளியிடப்பட்டது.
ஒரு நாளைக்கு 8 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் தேவஸ்தான இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். அகர்பத்தி விற்பனை திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் செயல் அதிகாரி ஜவகர், கோசாலை மற்றும் ஆயுர்வேத கல்லூரி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய அவர், “ஏழுமலையான் கோயில் உள்பட இதர தேவஸ்தான கோயில்களில் சுவாமிக்கு பயன்படுத்திய பூக்களை கொண்டு பெங்களூரை சேர்ந்த தர்ஷன் நிறுவனத்துடன் இணைந்து ஏழு விதமான நறுமணங்கள் கொண்ட அகர்பத்திகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றை செப்டம்பர் முதல் வாரத்தில் பக்தர்களுக்காக விற்பனைக்கு கொண்டு வர வேண்டும்” என்று கூறினார்.

மேலும் அவர், “திருமலையில் உள்ள

லட்டு கவுன்டர், தேங்காய் கவுன்டர், கோசாலை, திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயில், திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயில், விஷ்ணு நிவாசம் மற்றும் சீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை ஆகிய இடங்களில் விற்பனைக்கு கொண்டு வர வேண்டும். எஸ்.வி. ஆயுர்வேத மருந்தகம், கோவையைச் சேர்ந்த ஆசிர்வாத் நிறுவனத்துடன் இணைந்து, 15 வகையான பஞ்சகவ்ய பொருட்கள் தயாரிக்கப்பட உள்ளது” என்றும் பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad