பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்வு - "பங்க்"குகளில் வரிசைக்கட்டி நிற்கும் வாகனங்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 24, 2021

பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்வு - "பங்க்"குகளில் வரிசைக்கட்டி நிற்கும் வாகனங்கள்!

பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்வு - "பங்க்"குகளில் வரிசைக்கட்டி நிற்கும் வாகனங்கள்!

லெபனான் நாட்டில், பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதன் மீதான விலையை அந்நாட்டு அரசு பல மடங்கு அதிகரித்துள்ளது. எனினும், வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப பெட்ரோல் நிலையங்களில் ஏராளமான கார்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன.

மத்திய கிழக்கு நாடான லெபனான் நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டினை அமெரிக்கா கொண்டுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் பலவும் லெபனானுக்கு எரிபொருள் விநியோகம் செய்வதை நிறுத்தி விட்டன. இதனால் லெபனானில் எண்ணெய் கையிருப்பு காலியாகி விட்டது. எரிபொருள் இல்லாமல் பல மின் உற்பத்தி மையங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. எரிபொருள் விலையும் பெருமளவு உயர்ந்துள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்குவதற்கு கூட மக்கள் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கார்களும், மோட்டார் சைக்கிள்களும் காத்திருக்கின்றன.

இந்நிலையில் லெபனானுக்கு ஈரான் உதவ முன்வந்துள்ளது. ஈரானில் இருந்து 2 எரிபொருள் கப்பல்கள் விரைவில் ஹெர்மெலுக்கு வர உள்ளதாக லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு கொரில்லா படையான ஹெஸ்பெல்லா தெரிவித்துள்ளது.

இந்த எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா தடுக்க முடியாது என்றும் அந்த அமைப்பின் தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லா கூறியுள்ளார். லெபனான் நாட்டில் உள்ள எண்ணெய் வளத்தை கண்டறிய ஈரான் நாட்டு நிறுவனத்தின் உதவியுடன் விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் ஹெஸ்பெல்லா அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad