மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமனம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 22, 2021

மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமனம்!

மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமனம்!

சிக்கிம் மாநில ஆளுநர் கங்காதர் பிரசாத் மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில், தற்போது மணிப்பூர் மாநிலத்தின் புதிய ஆளுநராக இல.கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாட்டின் தஞ்சையை சார்ந்த இல.கணேசன்(76), தமிழக பாஜக தலைவராகவும், மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யாகவும் இருந்தவர். பாஜகவில் தேசிய குழு உறுப்பினராக உள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவராக இவர் பொறுப்பு வகித்ததற்கு முன்னர் அக்கட்சியின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் மாநில அளவிலும், தேசிய அளவிலும் இருந்துள்ளார்.

இந்த நிலையில், மணிப்பூர் மாநில ஆளுநராக தமிழ்நாட்டை சேர்ந்த இல.கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு முன்னர் தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பையும் தமிழிசை கூடுதலாக கவனித்து வருகிறார்.முன்னதாக, பாஜகவை சார்ந்த எல்.முருகன் மத்திய அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அவருக்கு மத்திய அமைச்சர் பொறுப்பை பாஜக மேலிடம் வழங்கியது. அதேபோல், தமிழக முன்னாள் பாஜக தலைவர்களுக்கு பல்வேறு முக்கியப் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இல.கணேசனும் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad