கொடநாடு விவகாரத்தில் பயமா, எங்களுக்கா..? ஜெயக்குமார் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 23, 2021

கொடநாடு விவகாரத்தில் பயமா, எங்களுக்கா..? ஜெயக்குமார்

கொடநாடு விவகாரத்தில் பயமா, எங்களுக்கா..? ஜெயக்குமார்

தமிழ்நாடு அரசியலில் குறிப்பாக அதிமுகவுக்குள் பூகம்பத்தையே ஏற்படுத்தியுள்ளது கொடநாடு கொலை கொள்ளை சம்பவம். இந்த விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் அடிபடுகிறது.


இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மாஜி அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து சென்னையில் செய்தியாளார்களிடையே பேசினார்.“கொடநாடு விவகாரத்தில் பயப்பட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. அதிமுகவுக்கு சங்கடங்கள் கொடுப்பதற்காக கொடநாடு விவகாரத்தை பேரவையில் விவாதிக்கின்றனர்.

நீதிமன்ற அதிகாரத்தை சட்டமன்றமோ, சட்டமன்ற அதிகாரத்தை நீதிமன்றமோ கையில் எடுக்க முடியாது. மரபை மீறி கொடநாடு எஸ்டேட் விவகாரத்தை சட்டப்பேரவையில் விவாதிப்பதா?


நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கொடநாடு வழக்கை சட்டப்பேரவையில் விவாதித்தது விதிமீறல். சட்டமன்றத்தில் விவாதிக்க எவ்வளவோ பிரச்னைகள் உள்ளபோது, கொடநாடு விவகாரத்தை பேச வேண்டுமா? உரிமை மீறல் என்பதால் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்” என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad