அமைச்சரால் சங்கடம்... சபையில் மன்னிப்பு கேட்க முதல்வர் ஸ்டாலின்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 24, 2021

அமைச்சரால் சங்கடம்... சபையில் மன்னிப்பு கேட்க முதல்வர் ஸ்டாலின்!

அமைச்சரால் சங்கடம்... சபையில் மன்னிப்பு கேட்க முதல்வர் ஸ்டாலின்!

நீர்வளத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் சட்டமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, அதிமுக எம்எல்ஏ கே.பி. முனுசாமி பேசும்போது, ''திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் 4 ரூபாயும் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பெட்ரோல் விலை மட்டும் 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது'' என்று சுட்டிக்காட்டினார்.

உடனே குறுக்கிட்ட நிதியமைச்சர் தியாகராஜன், ''2011 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை ஐந்து முறை உயர்த்தப்பட்டது. ஒருமுறை கூட குறைக்கப்படவில்லை,'' என்று ஆவேசமாக கூறிய அவர், தொடர்ந்து பேசியபோது ஒரு வார்த்தையை பயன்படுத்தினார்.

அந்த வார்த்தையை, சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தினர். அப்போது எழுந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நிதியமைச்சரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் விதத்தில் ஒரு கருத்தை கூறினார்.

அவருக்கு பதிலடி கொடுத்த நிதியமைச்சர், ''தனிநபரை பற்றி நான் கூறவில்லை. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் திசைதிருப்பும் வகையில் பேசுகிறார். யாரையும் நான் அவமதிக்கவில்லை,'' என்றார்.

அப்போது எழுந்த முதல்வர் ஸ்டாலின், ''நிதியைச்சர் விளக்கம் தந்தபோது, 'அதை சொல்வதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது' என கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் வார்த்தையை மாற்றி பயன்படுத்தியதற்கு உள்ளபடியே வருந்துகிறேன். அந்த வார்த்தையை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்'' என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad