துரைமுருகனை புகழந்த ஓபிஎஸ்: சூடான ஈபிஎஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 23, 2021

துரைமுருகனை புகழந்த ஓபிஎஸ்: சூடான ஈபிஎஸ்!

துரைமுருகனை புகழந்த ஓபிஎஸ்: சூடான ஈபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. திட்டமிட்டதைவிட முன் கூட்டியே அவையை முடிக்க அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பட்ஜெட் மீதான பொது விவாதம் முடிந்துள்ளது. தற்போது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், சட்டப்பேரவையில் முதலாவது நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், தமிழக அமைச்சர் துரைமுருகனுக்கு பாராட்டு தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். நூறு ஆண்டுகள் பெருமைமிக்க அவையின் 50 ஆண்டு கால உறுப்பினராக துரைமுருகன் இருக்கிறார் என முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூடினார்.

தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளாக அனைவரது மனதையும் கவர்ந்தவர் துரைமுருகன். சூடாக பேசுவார், உடனே அடுத்த விநாடியே இனிமையாக பேசும் ஆற்றல் கொண்டவர் துரைமுருகன். எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருப்பவர் துரைமுருகன்” என்று புகழாரம் சூடினார்.
இந்த கூட்டத்தொடரில் கொடநாடு விவகாரம் பூதாகரமாக கிளம்பியுள்ள நிலையில், அதிமுகவினர் அமளியிலும், போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி அச்சத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் புகழ்ந்து பேசியுள்ள சம்பவம் அக்கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஈபிஎஸ் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad