செப்டம்பர் 10: தமிழகத்தில் இன்று கொரோனா நிலவரம் என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 10, 2021

செப்டம்பர் 10: தமிழகத்தில் இன்று கொரோனா நிலவரம் என்ன?

செப்டம்பர் 10: தமிழகத்தில் இன்று கொரோனா நிலவரம் என்ன?

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,631 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,30,592 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தற்போது 16,304 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 174 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 545882 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 535663 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 8421 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 235 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 238325 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 233860 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2293
பேர் பலியாகியுள்ளனர்.

செங்கல்பட்டில் இன்று 133 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 166482 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 162924 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2442
பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,57,689 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 4,30,08,711 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 1,523 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 25,79,169 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 25 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 35,119 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad