செப்டம்பர் 11 மகாகவி நாள்: தமிழக அரசின் அறிவிப்புக்கு அண்ணாமலை, ராமதாஸ் வரவேற்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 10, 2021

செப்டம்பர் 11 மகாகவி நாள்: தமிழக அரசின் அறிவிப்புக்கு அண்ணாமலை, ராமதாஸ் வரவேற்பு!

செப்டம்பர் 11 மகாகவி நாள்: தமிழக அரசின் அறிவிப்புக்கு அண்ணாமலை, ராமதாஸ் வரவேற்பு!

மகாகவி பாரதியாரை போற்றும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 14 அறிவிப்புகளை இன்று வெளியிட்டார். அதில், பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் நாள், அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் எனவும் அறிவித்தார்.
அதை தொடர்ந்து அந்நாளில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்தி பாரதி இளங்கவிஞர் விருது மாணவன் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும்‌. பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் மற்றும் கட்டுரைகளைத்
தொகுத்து மனதில் உறுதி வேண்டும் என்ற புத்தகமாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் சுமார் 37 லட்சம் பேருக்கு 10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் உள்ளிட்ட 14 அறிவிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும், இளைஞர்கள் என பலரும் நன்றி தெரிவித்துள்ளனர். அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமல ை தமது ட்விட்டர் பதிவில் '' நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்...


என்று தேசத்திற்கும் தமிழுக்கும் வாழ்ந்த மகாகவியை அரசின் அறிவிப்புகளால் அங்கீகரித்துள்ளீர்கள். சுதந்திரப் போரின் எரிமலையாய் திகழ்ந்த வஉசி, பாரதி, இருவருக்கும் காலம் கடந்த அங்கீகாரம்'' என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதுபோல பாமக நிறுவனர் ராமதாஸ் தமது பதிவில் ''மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் பதினோராம் நாள் மகாகவி பாரதியார் நாளாக கடைபிடிக்கப்படும்; பாரதியாரின் படைப்புகளை மக்களிடமும் மாணவர்களிடமும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருப்பது நல்ல நடவடிக்கை. பாரதியாரை எல்லா நாளும் நினைவில் கொள்வோம்!'' என இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad