போட்டியின்றி தேர்வான திமுக உறுப்பினர்கள்: ராஜ்யசபா எண்ணிக்கை 10ஆக உயர்வு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 27, 2021

போட்டியின்றி தேர்வான திமுக உறுப்பினர்கள்: ராஜ்யசபா எண்ணிக்கை 10ஆக உயர்வு!

போட்டியின்றி தேர்வான திமுக உறுப்பினர்கள்: ராஜ்யசபா எண்ணிக்கை 10ஆக உயர்வு!

அதிமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றதால் தங்களது எம்.பி. பதவிகளை அவர்கள் ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து, அவ்விரு மாநிலங்களவை இடங்களும் காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த 2 காலி இடங்களுக்கும் செப்டம்பர், அக்டோபார் தனித்தனியாக தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இரு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கும் கனிமொழி என்.வி.என்.சோமு மற்றும் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகிய இருவரை வேட்பாளர்களாக திமுக தலைமை அறிவித்தது.

இதையடுத்து, மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களான கனிமொழி என்.வி.என்.சோமு மற்றும் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், எஞ்சியவர்களின் மனுக்கல் நிராகரிக்கபட்டதாகவும் சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் நடத்தும் அதிகாரியும், சட்டப்பேரவைச் செயலாளருமான சீனிவாசன் அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த நிலையில், திமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக கனிமொழி என்.வி.என்.சோமு மற்றும் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அதிமுகவின் முகமது ஜானின் மறைவை தொடர்ந்து காலியாக இருந்த மாநிலங்களவை இடத்துக்கு அறிவிக்கப்பட்ட தேர்தலில், திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எம்.எம்.அப்துல்லா போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் இரண்டு பேர் தேர்வாகியுள்ளனர். இதன் மூலம், மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad