செம குஷியில் எல்.முருகன்; இப்படியொரு வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 27, 2021

செம குஷியில் எல்.முருகன்; இப்படியொரு வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது!

செம குஷியில் எல்.முருகன்; இப்படியொரு வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட போது, தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இவர் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணையமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ஆனால் எம்.பியாக இல்லாத நிலையில், அடுத்த ஆறு மாதங்களுக்குள் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். இந்த சூழலில் மாநிலங்களவையில் 7 இடங்கள் இருப்பதால் அதற்கான இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.


பாஜக ஆட்சி

அதில் மத்தியப் பிரதேசத்தில் காலியாக இருந்த இடத்திற்கு எல்.முருகன் போட்டியிட பாஜக மேலிடம் வாய்ப்பு வழங்கியது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ஆம் தேதி நிறைவடைந்தது. மத்தியப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. இந்த சூழலில் காங்கிரஸ் சார்பில் யாரும் நிறுத்தப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற வேறு யாருக்கும் வாய்ப்பில்லை. இது எல்.முருகனுக்கு சாதகமாக மாறியது.

போட்டியின்றி தேர்வு

அதாவது போட்டியின்றி மாநிலங்களவை எம்.பியாகும் வாய்ப்பு உருவானது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக மத்திய அரசு காத்திருந்தது. இந்நிலையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மாநிலங்களவை எம்.பியாக வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இப்படியொரு வாய்ப்பு அவ்வளவு எளிதாக யாருக்கும் கிடைக்காது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டிருக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad