12,000 கி.மீ மெகா பயணம்; உ.பியில் கொடி நாட்டுவாரா பிரியங்கா காந்தி? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 11, 2021

12,000 கி.மீ மெகா பயணம்; உ.பியில் கொடி நாட்டுவாரா பிரியங்கா காந்தி?

12,000 கி.மீ மெகா பயணம்; உ.பியில் கொடி நாட்டுவாரா பிரியங்கா காந்தி?

உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன் 5 ஆண்டுகால ஆட்சி அடுத்த ஆண்டு நிறைவு பெறுகிறது. இதையடுத்து சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக பதவி வகித்து வரும் பிரியங்கா காந்தி பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தொடர்ச்சியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பட்ட மக்களை சந்தித்து வருகிறார். இவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்து, அவற்றின் உதவியுடன் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு பிரியங்கா காந்தி சென்றிருந்தார்.

அவரது தலைமையில் நேற்றைய தினம் மாநில காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை மற்றும் வியூகம் வகுக்கும் குழுவின் ஆலோசனைக் கூட்டம் லக்னோவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் ’பிரதிக்யா யாத்ரா’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் 12 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பிரியங்கா காந்தி பயணம் செய்ய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் நகரங்கள், கிராமங்கள் என பல்வேறு பகுதிகளுக்கும் சென்று காங்கிரஸ் சார்பில் பிரச்சாரம் செய்து பொதுமக்களின் செல்வாக்கை பெற திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் நேரத்தில் அளிக்கப்படும் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என மக்களுக்கு உறுதி அளிக்கப்படும். இந்த திட்டத்தை இறுதி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியங்கா காந்தியை விரைவில் சல்மான் குர்ஷித் சந்தித்து விரிவாக ஆலோசிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்ச்சியாக தனது தாய் சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலிக்கு சென்று, அங்குள்ள சில கிராமங்களில் மக்களை சந்தித்து பேசவுள்ளார். இந்த முறை வலுவான கூட்டணி அமைத்து, ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் காய்களை நகர்த்தி வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad