பல்கலை பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் வரலாறு - போராட்டத்தில் குதித்த மாணவர்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 11, 2021

பல்கலை பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் வரலாறு - போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!

பல்கலை பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் வரலாறு - போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!

கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில், சாவர்க்கர், கோல்வால்கர், தீனதயாள் உபாத்தியாயா உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டு உள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் பல்கலைக்கழகத்தின், எம்.ஏ., நிர்வாகம் மற்றும் அரசியல் துறையின் மூன்றாவது செமஸ்டர் பாடத்திட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., சிந்தனைவாதிகளான, சாவர்க்கர், கோல்வால்கர், தீனதயாள் உபாத்தியாயா ஆகியோரின் படைப்புகள் சேர்க்கப்பட்டு உள்ளன.

இதற்கு எதிராக கேரள மாணவர் அமைப்பு, கேரள இஸ்லாமிய மாணவர்கள் கூட்டமைப்பு ஆகியவை போராட்டத்தில் ஈடுபட்டன. பாடத்திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக, எவ்வித ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை என மாணவர் அமைப்பு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இது குறித்து விளக்கமளித்த கண்ணூர் பல்கலைக்கழக துணைவேந்தர் கோபிநாத் ரவிந்திரன், அரசியல் சிந்தனைகள் மற்றும் வரலாற்றைப் படிக்கும் போது அதன் அனைத்துப் பக்கங்களும் விவாதிக்கப்பட வேண்டும். எனினும் இது குறித்து வெளியான தகவலின்படி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பதா, வேண்டாமா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad