முதல்வர் விஜய் ரூபானி திடீர் ராஜினாமா; குஜராத் அரசியலில் பரபரப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 11, 2021

முதல்வர் விஜய் ரூபானி திடீர் ராஜினாமா; குஜராத் அரசியலில் பரபரப்பு!

முதல்வர் விஜய் ரூபானி திடீர் ராஜினாமா; குஜராத் அரசியலில் பரபரப்பு!

குஜராத் மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்து 14 ஆண்டுகள் ஆட்சி செய்தவர் நரேந்திர மோடி. இவர் 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாட்டின் பிரதமரானார். இதையடுத்து எஞ்சிய ஆட்சிக் காலத்தில் ஆனந்தி பென் படேல், விஜய் ரூபானி ஆகியோர் முதல்வர்களாக பதவி வகித்தனர். பின்னர் 2017ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.

முதல்வர் திடீர் ராஜினாமா

இந்த சூழலில் விஜய் ரூபானிக்கு முதல்வராக மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு குஜராத் சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையில் 4 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்த முதல்வர் விஜய் ரூபானி இன்று (செப்டம்பர் 11) தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதையொட்டி தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஆச்சாரியா தேவ்ராத்திடம் அளித்திருக்கிறார்.

பாஜக தலைமைக்கு நன்றி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ரூபானி, முதல்வராக தனக்கு வாய்ப்பளித்த பாஜக தலைமைக்கு மிகுந்த நன்றி. 5 ஆண்டுகள் குஜராத் மாநிலத்திற்கு முதல்வராக பதவி வகித்திருக்கிறேன். இது நிச்சயம் நீண்ட காலம் தான். இந்த ஆட்சிக்கு பொதுமக்கள் சிறப்பான ஆதரவு அளித்து வந்தனர். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் குஜராத் மாநிலத்தின் மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிந்தது.

No comments:

Post a Comment

Post Top Ad