வரும் 20ல் ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க., கூட்டணி போராட்டம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 5, 2021

வரும் 20ல் ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க., கூட்டணி போராட்டம்!

வரும் 20ல் ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க., கூட்டணி போராட்டம்!

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து, வரும் 20ம் தேதி போராட்டம் நடத்தவிருப்பதாக தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.

இது தொடர்பாக, தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி நடைபெற்ற இந்திய அளவிலான எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற காணொலி கூட்டத்தில், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு தொடருவது, விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு..

தனியார் மயமாக்கல், வேலை இல்லாத் திண்டாட்டம், பொதுத் துறை நிறுவனங்களை விற்பது, பெகாசஸ் ஒட்டுக் கேட்பு உள்ளிட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத – ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்களைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அனைத்து கூட்டணிக் கட்சிகளின் சார்பில், மாநிலம் முழுவதும் வரும் 20ம் தேதி திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில், தங்களின் இல்லம் முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஒருங்கிணைந்து போராடுவோம். மதச்சார்பற்ற – ஜனநாயக இந்தியக் குடியரசைப் பாதுகாப்போம்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad