கப்பல் ஓட்டிய 'இந்தியர்' ஆம்...! அண்ணாமலைக்கு என்னாச்சு? ஏன் இப்படி? நெட்டிசன்கள் காட்டம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 5, 2021

கப்பல் ஓட்டிய 'இந்தியர்' ஆம்...! அண்ணாமலைக்கு என்னாச்சு? ஏன் இப்படி? நெட்டிசன்கள் காட்டம்

கப்பல் ஓட்டிய 'இந்தியர்' ஆம்...! அண்ணாமலைக்கு என்னாச்சு? ஏன் இப்படி? நெட்டிசன்கள் காட்டம்

சுதந்திர போராட்ட தியாகியும், செக்கிழுத்த செம்மலுமான கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்த நாள் விழா இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 150 ஆவது பிறந்த நாளையொட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
வ.உ.சி.யின் 150-வது பிறந்த நாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று ஏற்கனவே சட்டசபை உரையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதை தொடர்ந்து, 14 அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதில், ''சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள வ.உ. சிதம்பரனார் சிறையில் இழுத்த செக்கு வைக்கப்பட்டிருக்கக்கூடிய மண்டபம் பொலிவூட்டப்பட்டு, அங்கு அன்னாரது மார்பளவு சிலை திறந்து வைக்கப்படும். தூத்துக்குடி மாநகரில், முதன்மைச் சாலையான மேல பெரிய காட்டன் சாலை, இனி ‘வ.உ. சிதம்பரனார் சாலை’ என அழைக்கப்படும்.

தனது வாழ்நாளின் முக்கிய நாட்களை கோவை சிறையிலே கழித்த வ.உ.சிதம்பரனாரின் முழு உருவச் சிலையானது, கோயம்புத்தூர்

வ.உ.சிதம்பரனார் பூங்காவில் அமைக்கப்படும்'' ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆங்கிலேயர் காலத்தில் முதன்முதலாக அவர்களை எதிர்த்து கப்பல் விட்டதன் காரணமாகவே வ.உ.சிதம்பரனார் கப்பல் ஒட்டிய தமிழன் என்று அழைக்கப்படுகிறார். சுதந்திர போராட்டத்தில் இவர் பெரிதும் தனித்துவம் பெற்றவர்.


இந்நிலையில், இவரது அடையாளத்தை மறைக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ள ட்வீட் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. வஉசிக்கு வாழ்த்து பதிவிட்டுள்ள அண்ணாமலை, ''தேசத்தின் மானம் கப்பலில் போகாமல் காப்பாற்ற கப்பலோட்டிய இந்தியர். வ.உ.சிதம்பரம்பிள்ளை எனும் தென்னாட்டுத் திலகர், வீரம் மிக்க பேச்சாலும், வீரியம் மிக்க எழுத்தாலும், சுதந்திர யாகத்தை தியாகத்தால் வளர்த்தவர். செக்கிழுத்த செம்மலை வணங்குகிறேன்!'' என இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad