பள்ளி வகுப்பறையில்தான் குழந்தையின் எதிர்காலம் வடிவமைக்கப்படுகிறது: வைகோ - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 5, 2021

பள்ளி வகுப்பறையில்தான் குழந்தையின் எதிர்காலம் வடிவமைக்கப்படுகிறது: வைகோ

பள்ளி வகுப்பறையில்தான் குழந்தையின் எதிர்காலம் வடிவமைக்கப்படுகிறது: வைகோ

வாழ்க்கைப் பாடத்தைக் கற்பித்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டிகளாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள்தான் என்று ஆசிரியர் தினத்திற்கு வைகோ வாழ்த்து கூறியுள்ளார்.
“மனிதகுல வரலாற்றில் பிரிக்க முடியாத, சமூகத்தின் அச்சாணியாக விளங்குபவர்கள்
ஆசிரியர்கள். தாயின் கருவறையில் குழந்தை உருவாகிறது. பள்ளி வகுப்பறையில்தான் அந்தக் குழந்தையின் எதிர்காலம் வடிவமைக்கப்படுகிறது. அதற்கு அடித்தளம் அமைத்துத் தரும் அர்ப்பணிப்புப் பணியில் உள்ளவர்கள் ஆசிரியர்களே.

வாழ்க்கைப் பாடத்தைக் கற்பித்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டிகளாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள்தான்.

ஆசிரியர் பணி என்பது வெறும் ஊழியத்திற்கான பணி மட்டும் அல்ல, ஒரு உயிரோட்டமான பணி; வருங்கால சமூகத்தை வார்ப்பிக்கும் கடமையும், பொறுப்புணர்வும் மிக்க பணி. எனவேதான் ஆசிரியர்களைப் போற்றும் நாளாக செப்டம்பர் 5ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

நல்லாசிரியராக விளங்கி, நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவர் பொறுப்பை வகித்த தத்துவ மேதை சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆசிரியர் நாளாக பிரகடனம் செய்யப்பட்டது. இந்த நன்னாளில் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்”

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

'' ஆசிரியர்கள், சமுதாயம் என்னும் கடலின் கரையிலுள்ள கலங்கரை விளக்கங்கள்!

ஆசிரியப் பணி என்பது கல்வியைப் புகட்டுவதோடு, மனிதர்களை; அதுவும் மாமனிதர்களை உருவாக்கும் அறப்பணி. என்னரும் தமிழ்நாட்டின்கண் அனைவரும் கற்று இன்புறச் செய்யும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் வாழ்த்துகள்!'' என முதல்வர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad