நிதியமைச்சரின் தாத்தாவுக்கு நினைவு மண்டபம்: ஓபிஎஸ் கோரிக்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 10, 2021

நிதியமைச்சரின் தாத்தாவுக்கு நினைவு மண்டபம்: ஓபிஎஸ் கோரிக்கை!

நிதியமைச்சரின் தாத்தாவுக்கு நினைவு மண்டபம்: ஓபிஎஸ் கோரிக்கை!

நீதிக் கட்சியைச் சேர்ந்த பி. சுப்பராயன் மற்றும் பி.டி. ராஜன் ஆகிய இருவருக்கும் மணி மண்டபங்கள் அமைக்க வேண்டும் என எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “சமூக நீதி என்றவுடன் அனைவரின் நினைவுக்கும் வருவது இடஒதுக்கீடுதான். இந்த சமூக நீதிக்காக போராடிய பெரியாருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவருடைய பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் அறிவித்தார். அதற்கு நன்றி தெரிவித்து அதிமுகவின் சார்பில் நானும் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்ட போது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அந்த ஆபத்திலிருந்து பிற்படுத்தப்பட்ட மக்களையும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களையும், ஆதி திராவிட மற்றும் பழங்குடி மக்களையும் விடுவித்தவர் ஜெயலலிதா என்பதால் தான் அவருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் 'சமூக நீதி காத்த வீராங்கனை' என்ற பட்டம் வழங்கப்பட்டது.

இந்த வரிசையில், சமூக நீதிக்காக போராடியவர்களில் முக்கிய இடம் பெற்றிருப்பவர்கள் சென்னை ராஜதானியின் முன்னாள் முதல்வர்களான பி. சுப்பராயன் மற்றும் முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜனின் தந்தையும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பாட்டனாருமான பி.டி. ராஜன் ஆகியோர். பொதுவாக இந்திய மக்களுக்கும், குறிப்பாக தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் அளப்பரிய சேவைகளைச் செய்தவர்கள் பி. சுப்பராயன் மற்றும் பி.டி. ராஜன் என்று சொன்னால் அது மிகையாகாது. 1920-1937 காலக்கட்டத்தில், சென்னை ராஜதானியில் இரட்டை ஆட்சி முறை நடைமுறையில் இருந்தபோது, ஆட்சி புரிந்த ஐந்து அரசுகளில் நான்கு நீதிக்கட்சி அரசுகள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு என்று ஒரு நீண்ட நெடிய வரலாறு 1854 ஆம் ஆண்டு அன்றைக்கு இருந்த வருவாய் வாரியம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையிலிருந்து தொடங்கியது என்றாலும், 1920 ஆம் ஆண்டு

நீதிக் கட்சி தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு தான் இடஒதுக்கீட்டுக் கொள்கை புதிய பரிமாணத்தை பெற்றது. அதாவது, வருவாய்த் துறையில் மாத்திரம் நிலவி வந்த இடஒதுக்கீடு அரசின் எல்லாத் துறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. அரசுப் பணிகளில் சேர்க்கப்படுவோர் ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் பணிகளில் அமர்த்தப்படுவோரின் எண்ணிக்கை பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் வகையில் 1921 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இந்த ஆணை தான் முதல் வகுப்புவாரி அரசாணை, அதாவது First Communal Government Order ஆகும்.

No comments:

Post a Comment

Post Top Ad