நீட் தேர்வு ரத்து: 'உதாரு விட்ட உதய்'... தேசிய அளவில் ட்ரெண்டாகிய டேக் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 12, 2021

நீட் தேர்வு ரத்து: 'உதாரு விட்ட உதய்'... தேசிய அளவில் ட்ரெண்டாகிய டேக்

நீட் தேர்வு ரத்து: 'உதாரு விட்ட உதய்'... தேசிய அளவில் ட்ரெண்டாகிய டேக்

''மாணவர்களே, பெற்றோர்களே பயப்படாதீங்க. நம்பிக்கையோடு இருங்க. திமுக ஆட்சிக்கு வந்த உடனே நீட் தேர்வு ரத்து செய்யப்படும்'' என்று முதல்வர் ஸ்டாலினின் மகனும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் சொன்ன வாக்குறுதிதான் இது.
மேலும், திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் எண் 160 இல் நீட் தேர்வு ரத்து என்பதை குறிப்பிட்டுள்ளது. அதில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சி காலத்தில் பள்ளி இறுதி வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ கல்லூரிக்கான சேர்க்கைகள் நடைபெற்றன.

தற்போதைய ஒன்றிய அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்தி தமிழக மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேரும் வாய்ப்பினை தட்டி பறித்திருக்கிறது. கழக ஆட்சி அமைந்தவுடன் முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை நிறைவேற்றிக் குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்டும்'' என இவ்வாறு வாக்குறுதியை கொடுத்துள்ளது

இந்நிலையில் தந்தையும், மகனும் மாறி மாறி தேர்தல் பிரச்சாரத்தில் நீட் தேர்வை எப்படி ரத்து செய்வோம் என்பதை சொல்லாமல், போகிற போக்கில் நீட் தேர்வு ரத்தே முதல் கையெழுத்து எனக்கூறிவிட்டு சென்றுள்ளனர் என சமூக வலைத்தளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்த ு வருகின்றனர்.

மேலும், தமிழகத்தில் நீட் தேர்வினால் மேலும் ஒரு மரணம் ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், இதனை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள் ''
உதாரு விட்ட உதய்'' என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்துள்ளனர்.

தேசிய அளவில் அந்த டேக் முதலிடத்தில் உள்ளது. நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட தனுஷின் மரணத்துக்கு மோடி அரசே பொறுப்பு என்று திமுகவும், திமுகவே பொறுப்பு என்று பாஜகவும் மாறி மாறி பழி சுமத்தி வரம் நிலையில், மரண பயத்தில் நீட் தேர்வை எதிர்கொள்கின்றனர் தமிழகத்தை சேர்ந்த பல்லாயிர ஏழை மாணவர்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad