ஊழியர்கள் போராட்ட அறிவிப்பு; தமிழக அரசுக்கு ஓபிஎஸ் சொன்ன அட்வைஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 27, 2021

ஊழியர்கள் போராட்ட அறிவிப்பு; தமிழக அரசுக்கு ஓபிஎஸ் சொன்ன அட்வைஸ்!

ஊழியர்கள் போராட்ட அறிவிப்பு; தமிழக அரசுக்கு ஓபிஎஸ் சொன்ன அட்வைஸ்!

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு அரசின் வேட்டி-சேலை வழங்கும் திட்டம், பள்ளி மாணவ, மாணவியருக்கான விலையில்லா சீருடை வழங்கும் திட்டம், முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கான வேட்டி-சேலை வழங்கும் திட்டம் ஆகிய அரசுத் திட்டங்களை
செயல்படுத்தி வருவதோடு, நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு சந்தைப்படுத்துவதில் உறுதுணையாக இருந்து கைத்தறி இரகங்களை பிரபலப்படுத்துதல்; வாடிக்கையாளர்களின் மாறிவரும் இரசனைக்கேற்ப பாரம்பரியம் மற்றும் நவீன ரகங்களை உருவாக்குதல்; பல்வேறு வகையிலான புதுமையான திட்டங்களைச்
செயல்படுத்துதல்

கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனமாக 'கோ-ஆப்டெக்ஸ்' என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் விளங்குகிறது. என கைத்தறித் துறைக்கு தன்னிகரற்ற பங்களிப்பை அளித்து வருவதோடு, நெசவாளர்களுக்கு நீடித்த வேலைவாய்ப்பினை வழங்கி வரும் இந்த கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், தன்னுடன் இணைக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேலான கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்ளால் உற்பத்தி செய்யப்படுகின்ற துணிகளை நாடு முழுவதும் பரவியுள்ள தன்னுடைய நூற்றுக்கணக்கான கிளைகள் மூலமாக விற்பனை செய்யும் பணியினை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கினைவகிக்கும் துணித்தொழிலை சந்தைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் விற்பனையகங்களில் பல ஆண்டுகளாக இரவு 8-00 மணிவரை இருந்த பணி நேரம் தற்போது 'இரவு 9-00 மணி வரை' என மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் 20 கிலோ மீட்டர், 30 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து பல பேருந்துகள் மாறி பணிக்கு வரும் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரவு நேரங்களில் 9-00 மணிக்கு மேல் பேருந்துகள் கிடைக்காமல் அவதிப்படக்கூடிய நிலைமை பெண்களுக்கு உருவாகியுள்ளதாகவும் இன்று பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இது மட்டுமல்லாமல், பல விற்பனையகங்களில் கழிப்பிட வசதிகள் இல்லை என்றும், தற்காலிக ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்படுவதில்லை என்றும்,

சில அதிகாரிகள் பெண் ஊழியர்களிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும், விற்பனையில் சரிவை ஏற்படுத்தும் செயல்கள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் ஆகியோரிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தும் எந்தப் பயனும் இல்லை என்பதால், வருகின்ற அக்டோபர் 5-ஆம் தேதி கோ-ஆப்டெக்ஸ் தலைமையகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாகவும், அதற்கும் தீர்வு காணப்படவில்லையென்றால், வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதைத் தவிர தங்களுக்கு வேறுவழியில்லை என்றும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad