இந்தியாவில் ஃபோர்டு வாகன உற்பத்தி ஆலைகள் மூடல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 9, 2021

இந்தியாவில் ஃபோர்டு வாகன உற்பத்தி ஆலைகள் மூடல்!

இந்தியாவில் ஃபோர்டு வாகன உற்பத்தி ஆலைகள் மூடல்!

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனம் ஃபோர்டு. சென்னை அருகே மறைமலை நகரில் இந்நிறுவனத்தின் தொழிற்சாலை அமைந்துள்ளது. அதேபோல், குஜராத் மாநிலத்தில் அந்நிறுவனத்தின் ஆலை உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் ஃபோர்டு வாகன உற்பத்தி ஆலைகளை மூட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஃபோர்டு நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முடிவை அமல்படுத்துவதற்கு ஓராண்டு காலமாகும் என்றும் தெரிகிறது. இதுகுறித்த செய்தியை எகனாமிக் டைம்ஸ் முதல்முறையாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவலை ஃபோர்டு நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

இருப்பினும், இந்தியாவில் இறக்குமதி மூலம் கார்களை ஃபோர்டு நிறுவனம் விற்பனை செய்யும் எனவும், காரை ஏற்கனவே வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை அளிக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜெனரல் மோட்டாரஸ், ஹார்லி டேவிட்சன் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் கார் உற்பத்தி ஆலைகளை மூடவுள்ளது. ஜெர்மனி, ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகளில் ஃபோர்டு நிறுவன ஆலைகள் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவிலும் மூட முடிவு செய்துள்ளது.

ஃபோர்டு வாகன உற்பத்தி ஆலை மூடப்பட்டால் இந்தியாவில் சுமார் 4,000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும் என கூறப்படுகிறது, அந்நிறுவனத்தை சார்ந்திருந்த சிறிய நிறுவனங்கள் பலவும், அதன் ஊழியர்களும் இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad