முதல்வர் ஸ்டாலின் - ஈபிஎஸ் இடையே காரசார விவாதம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 9, 2021

முதல்வர் ஸ்டாலின் - ஈபிஎஸ் இடையே காரசார விவாதம்!

முதல்வர் ஸ்டாலின் - ஈபிஎஸ் இடையே காரசார விவாதம்!

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, சட்ட ஒழுங்கு, தீயணைப்பு மீட்பு பணிகள் மற்றும் உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது, பேசிய எதிர்க்கட்சி தலைவர்
எடப்பாடி பழனிசாமி, தான் முதல்வராக இருந்த போது அதிமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டதாக தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தூத்துக்குடியில் ஜீப் மீது ஏறி துப்பாக்கிச்சூடு நடத்தியது அதிமுக ஆட்சியில்தானே, அப்போது நீங்கள்தானே முதலமைச்சர் என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், கொடநாடு விவகாரம் சாதாரணமான விஷயமல்ல. அதை எதில் சேர்ப்பது. இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என ஏன் நீதிமன்றம் சென்றீர்கள் என்று எடப்படி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பினார். ஜெயலலிதாவின் முகாம் அலுவலகமாக இருந்த கொடநாடு பங்களாவில் கண்காணிப்பு கேமராக்கள் கழற்றப்பட்டது எப்படி என்றும்

ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

முதல்வரின் கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு கொடநாடு பங்களா வேறு ஒருவர் வசம் சென்றுவிட்டதாகவும் தனியார் சொத்துக்கு தாங்கள் எப்படி பாதுகாப்பு தர முடியும் என்றும் பதில் அளித்தார்.

கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வரை சென்றது யார் என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, கொடநாடு சம்பவம் குறித்து முறைப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. வழக்கிற்கு நாங்கள் தடை கோரவில்லை. அந்த சம்பவத்திற்கும் எங்களுக்கும் எந்த தொடர்புமில்லை. கொலை, கொள்ளை வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad