தமிழகத்தில் அனைத்து பள்ளிகளை திறக்கலாம்: பச்சை கொடி காட்டிய சுகாதார அமைப்பு..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 27, 2021

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளை திறக்கலாம்: பச்சை கொடி காட்டிய சுகாதார அமைப்பு..!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளை திறக்கலாம்: பச்சை கொடி காட்டிய சுகாதார அமைப்பு..!

தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை மாநில அரசு திறந்துள்ளது. இருப்பினும், தொடக்க பள்ளி மாணவர்களின் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்படவில்லை. தமிழக அரசு இதுகுறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வரும் நிலையில் இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார். ஐசிஎம்ஆரின் செரோ சர்வே அறிக்கையை மேற்கோள் காட்டி பேசியவர், தமிழகத்தில் தொடக்க பள்ளிகளில் நேரடி வகுப்புகளை எடுப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்று கூறியுள்ளார்.
சவுமியா சுவாமிநாதன் பரிந்துரை:

ஷாப்பிங், விளையாடுதல் மற்றும் மற்றவர்களுடன் கலந்துரையாடுவது போன்ற சமூக வெளிப்பாடு குழந்தைகளிடையே ஆன்டிபாடிகள் இருப்பதற்கான முக்கிய காரணம். நல்ல காற்றோட்டம், சரீர இடைவெளி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற பாதுகாப்பு நெறிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட்டால் பள்ளிகளில் கொரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, குழந்தைகள் வீட்டில் தங்கியிருந்தாலும் பெரியவர்களின் அதே சதவீத ஆன்டிபாடிகள் அவர்களுக்கு உள்ளது. கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை கடுமையாக பாதிக்கும் என்று கூறுவதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை, இருப்பினும், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படாததால் குழந்தைகளில் நோய்த்தொற்றின் விகிதம் மாறலாம் ஆனால் பெரியவர்களுடன் ஒப்பிடும்போது குழந்தைகளில் நோயின் தீவிரம் மிகக் குறைவாக இருக்கும் என சவுமியா சுவாமிநாதன் கூறினார்.

தொடர்ந்து பேசியவர், கடந்த 18 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு அவ்வளவு பயனுள்ளதாக இல்லை. இதனால் மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளது. எனவே மாநில அரசு தொக்க பள்ளிகளை திறப்பது குறித்து பரிசீலனை செய்யலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad