வடகிழக்கு பருவ மழை: தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 11, 2021

வடகிழக்கு பருவ மழை: தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு..!

வடகிழக்கு பருவ மழை: தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு..!

வடகிழக்கு பருவமழை குறித்த ஆயத்த பணிகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு,
தலைமையில் இன்று (11.09.2021) தலைமை செயலகத்தில் சம்மந்தப்பட்ட துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறுத் துறை செயலாளர்கள், சம்மந்தப்பட்ட துறைத் தலைவர்கள், இராணுவம், விமானப்படை, கப்பற்படை, கடலோர காவல் படை, இந்தியவானிலை ஆய்வு மையம், ஒன்றிய நீர்வள ஆணையம், தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்ட ஒன்றிய அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் சென்னை

மாநகராட்சி ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் கூறியதாவது:

பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் பொருட்டு, குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், குறிப்பாக மழைநீர் வடிகால்களில் உள்ள அடைப்புகளை அகற்ற வேண்டும்மெனவும், ஏரி மற்றும் குளங்களின் கரைகளை பலப்படுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்கள். மேலும், வடிகால்கள் மற்றும் ஏரி குளங்களை தூர்வார நிலையான
வழிகாட்டு நடைமுறைகளை தயாரிக்கவும் அறிவுரை வழங்கினார்.மேலும், பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை தகவல்களை வழங்கும் வகையில் அனைத்து
மாநகராட்சிகளிலும், மாவட்டங்களிலும் அவசர கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் எனவும், இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்படும் எச்சரிக்கை செய்திகளை இந்த அவசரக் கட்டுப்பாட்டு மையங்களுக்கு அனுப்பப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமெனவும், அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பருவமழை துவங்குவதற்கு முன்னர் பேரிடர் தொடர்பான பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்க வேண்டும்மெனவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட வேண்டுமெனவும், பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை தகவல்களை விரைந்து அளித்திடும் வகையில் குடியிருப்போர் நலசங்களின் பட்டியல் தயாரித்து வாட்ஸ் ஆப் குழு அமைக்க வேண்டும்.

கிராமப்புறங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைளில் ஈடுபடுத்தும் பொருட்டு இளைஞர்களை கண்டறிந்து பயிற்சியளித்து, தேவையான மீட்பு உபகரண்ங்களை அவர்களுக்கு வழங்கி ஆயத்த நிலையை மேம்படுத்த வேண்டும். நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களின் போதுமான இருப்பு வைக்க வேண்டும். அரசு சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேடல், மீட்பு நிவாரணப் பணிகளில், தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்களை ஈடுபடுத்த வேண்டும் என்றும், பேரிடர்களால்
பாதிப்பிற்குள்ளாகும் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை மக்களுக்கு உடனுக்குடன் வழங்க உரிய
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.மேலும், பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை தகவல்களை பொதுமக்களுக்கு விரைந்து அளிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருட் சேதம் மற்றும் உயிர்சேதம் ஏற்படாமல் தவிர்க்கவும், குறைக்கவும் அனைத்து துறையினைச் சார்ந்த செயலாளர்களும், துறைத் தலைவர்களும்
ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மீட்புக் குழுக்கள் குறுகிய கால அளவில் பாதிக்கப்பட்ட
பகுதிகளை சென்றடைய ஏதுவாக தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad