புதிய ஆளுநர் நியமனம்: சந்தேகம் தெரிவித்த கே.எஸ்.அழகிரி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 10, 2021

புதிய ஆளுநர் நியமனம்: சந்தேகம் தெரிவித்த கே.எஸ்.அழகிரி!

புதிய ஆளுநர் நியமனம்: சந்தேகம் தெரிவித்த கே.எஸ்.அழகிரி!

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது அவர் முழு நேர பஞ்சாப் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த
ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆர்.என்.ரவி 1976ஆம் ஆண்டு கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரியாவார். சிபிஐ, இந்திய‌ உளவுத்தறையின் சிறப்பு இயக்குனராகவும் பணியாற்றிய அவர், 2012ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். நாகலாந்து கிளர்ச்சியாளர்களுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட முக்கிய காரணமான ஆர்.என்.ரவி தற்போது தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது நியமனத்துக்கு பாமக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் அத்தகைய நடவடிக்கைகளுக்கு புதிய ஆளுநர் துணை நிற்க வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.

இந்த நிலையில், ஸ்டாலினுக்கு இடையூறு செய்யும் வகையிலேயே ஆர்.என்.ரவியை ஆளுநராக மோடி அரசு நியமித்திருக்கிறதோ என்று சந்தேகப்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ஆர்.என்.ரவியை ஆளுநராக நியமித்து ஜனநாயகப் படுகொலை நடத்துவதற்கு ஆயுதமாகப் பயன்படுத்த மோடி அரசு முயன்றால், அதனை எதிர்த்து ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் மக்களைத் திரட்டிப் போராட வேண்டிய சூழல் உருவாகும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad