பள்ளி மாணவர்களுக்கு புதிய ஏற்பாடு; முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 10, 2021

பள்ளி மாணவர்களுக்கு புதிய ஏற்பாடு; முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு!

பள்ளி மாணவர்களுக்கு புதிய ஏற்பாடு; முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு சார்பில் கல்வி

உதவித்தொகை வழங்கப்படுகிறது. இவை ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை ஆகியவை மூலம் அந்தந்த பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதுதவிர NMMS என்ற வருவாய் வழி திறன் தேர்வு, TRUST தேர்வு, தேசிய திறனாய்வு தேர்வு போன்றவற்றில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கும் உதவித்தொகை கிடைக்கிறது. இவற்றை நேரடியாக மாணவர்கள் பெறும் வகையில் வங்கிக் கணக்குகள் தொடங்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனையற்ற வங்கிக் கணக்குகள்

இதுதொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்கள் பிறப்பித்த உத்தரவில், மாணவர்களுக்கு புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கும் போது குறைந்தபட்ச இருப்பு தொகை நிபந்தனை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேசமயம் தேசிய வங்கிகளில் மட்டுமே கணக்கு துவங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக

எஸ்.பி.ஐ வங்கியில் மாணவர்களுக்கு கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் குறைந்தபட்ச இருப்பு தொகையாக ஆயிரம் ரூபாய் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad