சசிகலாவின் மாஸ்டர் பிளான்: சத்தமில்லாமல் உருவாக்கும் ஆதரவு அலை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 10, 2021

சசிகலாவின் மாஸ்டர் பிளான்: சத்தமில்லாமல் உருவாக்கும் ஆதரவு அலை!

சசிகலாவின் மாஸ்டர் பிளான்: சத்தமில்லாமல் உருவாக்கும் ஆதரவு அலை!

பெங்களூர் சிறை வழக்கு, சொத்துகள் முடக்கம் என சசிகலாவுக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டு வரும்போதிலும் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியிலிருந்து அவர் பின்வாங்குவதாக தெரியவில்லை.
சட்டரீதியான போராட்டத்தை அவர் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் அரசியல் ரீதியான போராட்டத்தை
டிடிவி தினகரன் மேற்கொண்டார். தேர்தல் தோல்விக்குப் பின்னர் அரசியலில் பெரியளவில் ஆர்வம் காட்டாமல் தினகரன் ஒதுங்கியிருப்பது போல் உள்ளார். மகளின் திருமண வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அரசியல் ரீதியான போராட்டத்தையும் சசிகலாவே தொடங்கியுள்ளார்.

அதிமுக நிர்வாகிகளுடன் அலைபேசியில் சசிகலா பேசிவந்ததே அதிமுகவுக்குள் அனலைக் கிளப்பிய நிலையில் தற்போது நிர்வாகிகளை வீடு தேடிச் சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மதுசூதனன் உடல் நலம் பாதிக்கப்பட்ட போது மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். அவர் மறைந்த பின்னரும் அவரது வீடு தேடிச் சென்று ஆறுதல் கூறினார். ஓபிஎஸ் மனைவி இறந்தபோதும் சசிகலா நேரில் சென்று ஓபிஎஸ் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். இந்நிலையில் மறைந்த அமமுக நிர்வாகி

வெற்றிவேல் வீட்டுக்கும் சசிகலா சென்றுள்ளார்.

செப்டம்பர் 7ஆம் தேதி மாலை வெற்றிவேலின் மகனுக்கு அலைபேசி மூலம் சசிகலா உங்கள் வீட்டுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது. குடும்பத்தினரும் வர விருப்பம் தெரிவிக்க செப்டம்பர் 8ஆம் தேதி சசிகலா அங்கு சென்று அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.

சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திப்பதாக திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே செல்கிறது. அக்டோபர் 31ஆம் தேதி கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதற்குள் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களின் வீடுகளுக்கு சசிகலா விசிட் அடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

அதன்படி சசிகலா சந்திக்க உள்ள நிர்வாகிகளின் வீடுகளில் நல்லது, கெட்டது குறித்து லிஸ்ட் எடுக்கப்படுகிறது. அதன்படி தினம் ஒருவரது வீட்டுக்கு சென்று வர உள்ளாராம் சசிகலா. இதன் மூலம் சத்தமில்லாமல் தனக்கான ஆதரவு அலையை அவரே உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதன்பின்னர் சுற்றுப் பயணம் தொடங்கினால் அதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என நினைக்கிறாராம்.

No comments:

Post a Comment

Post Top Ad