திருப்பதியில் இப்படியொரு பிரம்மாண்டம்; பக்கா பிளான் போடும் தேவஸ்தானம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 6, 2021

திருப்பதியில் இப்படியொரு பிரம்மாண்டம்; பக்கா பிளான் போடும் தேவஸ்தானம்!

திருப்பதியில் இப்படியொரு பிரம்மாண்டம்; பக்கா பிளான் போடும் தேவஸ்தானம்!



வேதங்களை பாதுகாக்கவும், அவற்றை பிரபலப்படுத்தவும் பெரிய அளவிலான முயற்சிகளை முன்னெடுக்கப் போவதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள ஸ்ரீ தத்தா பீடத்தில் 5 நாட்கள் சிறப்பு நிகழ்வாக ஸ்ரீ சீனிவாச பஞ்சாகநிகா சதுர்வேத ஹாவன நிகழ்வு நடைபெற்றது. இதன் நிறைவு நாளில் பூர்ணஹூதி விழா அனுசரிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்.வி வேதக்கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் உலகம் மக்களின் நலன் மற்றும் இயற்கை பேரிடரில் இருந்து மீண்டு வருவதற்கான பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தேவஸ்தானத் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி, இந்து சனாதன தர்மத்தின் ஒருபகுதியாக வேதங்களை பாதுகாக்கவும்,

வேதங்களை பரப்புதல்

அவற்றை பரப்பவும் மிகப்பெரிய அளவிலான ஏற்பாடுகள் செய்யப்படும். வேதங்களில் ஏராளமான அறிவு கொட்டிக் கிடக்கின்றன. இதனை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. இவற்றை வருங்கால சந்ததியினருக்கு கொண்டு சேர்க்க வேண்டியது அவசியம். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் இந்து சனாதன தர்மத்தை பாதுகாக்கலாம் என்று கூறினார். மேலும் பேசுகையில், தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தினசரி வேதபாராயணம் பாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேசமயம் முக்கிய கோயில்களில் உள்ள வேத பண்டிதர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்.ஜம்முவில் ஸ்ரீவெங்கடாஜலதி கோயில்

வேதபாராயணம் பாடுவதற்கு அதிகப்படியான பண்டிதர்கள் ஈடுபடுத்தப்படுவர் என்றார். நாட்டின் அனைத்து முக்கிய இடங்களிலும் ஸ்ரீ வெங்கடாஜலபதி கோயிலை கட்ட தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. ஜம்முவில் சமீபத்தில் தான் பூமி பூஜை வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது என்று குறிப்பிட்டார். குடிகோ கோமாதா திட்டத்தின் கீழ் ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த 100 கோயில்களுக்கு இலவசமாக மாடுகளும், கன்றுகளும் அளிக்கப்பட்டன.தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகளுக்கு இரண்டு நாட்கள் தடை!
குடிகோ கோமாதா திட்டம்

இந்த திட்டம் 18 மாதங்களாக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எங்களின் கோமாதா திட்டத்தை பெருமைப்படுத்தும் எந்தவொரு கோயிலுக்கும் பசுக்களை தானமாக வழங்க தேவஸ்தானம் தயாராக உள்ளது. சமீபத்தில் திருமலை கோயிலில் அறிமுகம் செய்யப்பட்ட நைவேத்திய திட்டத்திற்கு பக்தர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதாவது பக்தர்களுக்கான பிரசாதங்கள் அனைத்தும் நாட்டு மாடுகளில் இருந்து பெறப்படும்.சுத்தமான நெய் மற்றும் இயற்கை விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்பட்ட காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இந்த திட்டத்தை தொடர்ச்சியாக செயல்படுத்த தேவஸ்தானம் உறுதி கொண்டுள்ளதாக தெரிவித்தார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருமலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலவச தரிசனத்தை மீண்டும் தொடங்குவது பற்றி விரைவில் முடிவெடுக்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

Post Top Ad