திருப்பதியில் இனிமேல் இலவசம்; தேவஸ்தானம் வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 8, 2021

திருப்பதியில் இனிமேல் இலவசம்; தேவஸ்தானம் வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு!

திருப்பதியில் இனிமேல் இலவசம்; தேவஸ்தானம் வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் திருக்கோயிலில் கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு சில மாதங்களுக்கு மட்டும் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது. பின்னர் நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்ததை அடுத்து, சாமி தரிசனத்திற்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது.
ஆன்லைன் வாயிலாக 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து வருபவர்களுக்கு மட்டும் திருமலையில் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் விஐபி தரிசனம், விவிஐபி தரிசனம் உள்ளிட்டவையும் அனுமதிக்கப்பட்டு வந்தன. இதற்கிடையில் நவநீத சேவை என்ற பெயரில் நாட்டு மாடுகளில் இருந்து பெறப்பட்ட தூய்மையான நெய் மற்றும் இயற்கை விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்பட்ட காய்கறிகளைக் கொண்டு ஏழுமலையானுக்கு நைவேத்தியம், பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம், அன்னதானம் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
இதையொட்டி நாட்டு மாடுகளை அதிக அளவில் நன்கொடையாக வழங்குமாறு பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவுறுத்தியது. அதேசமயம் சம்பிரதாய போஜனம் என்ற பெயரில் பல்வேறு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை குறைந்த விலையில் பக்தர்களுக்கு அளிக்கும் திட்டம் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டது. ஆனால் அன்னதானம் என்பது இலவசமாக மட்டுமே வழங்க வேண்டும் என்றும், அதனை வர்த்தக ரீதியில் செயல்படுத்துவதை ஏற்க முடியாது என்றும் பல்வேறு தரப்பினரும் கூறினர்.

No comments:

Post a Comment

Post Top Ad