தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் சிஐஏ தலைவர் சந்திப்பு!
ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, தலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். கடந்த ஒரு வாரமாகவே புதிய அரசு அமைப்பது தொடர்பாக
தலிபான்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்த நிலையில், தற்போது புதிய அரசை
அவர்கள் அமைத்துள்ளனர்.
தலிபான் அமைப்பைச் சேர்ந்த முல்லா முகமது ஹசன் அகுந்த், அந்நாட்டின் செயல் பிரதமர் ஆக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அந்த அமைப்பின் துணைத் தலைவர் முல்லா அப்துல் கனி பரதர் செயல் துணை பிரதமராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சிஐஏ தலைவர் வில்லியம் பர்ன்ஸ் டெல்லியில் நேற்று சந்தித்து பேசியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்த அதே நாளில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஆனால், இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், தலிபான்கள் ஆட்சி அமைத்த நிலையில், பாதுகாப்பு விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆப்கனை தலிபான்கள் கைபற்றிய நிலையில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் தங்களது தூதரக அந்நாட்டுடனான தூதரக நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டன.
No comments:
Post a Comment