நமது சட்டப் போராட்டம் இப்போது தொடங்குகிறது: மாணவர் தனுஷ் மரணத்துக்கு ஸ்டாலின் இரங்கல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 12, 2021

நமது சட்டப் போராட்டம் இப்போது தொடங்குகிறது: மாணவர் தனுஷ் மரணத்துக்கு ஸ்டாலின் இரங்கல்!

நமது சட்டப் போராட்டம் இப்போது தொடங்குகிறது: மாணவர் தனுஷ் மரணத்துக்கு ஸ்டாலின் இரங்கல்!

நாடு முழுவதும் இன்று
நீட் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தேர்வுக்கு ஆயத்தமாகி வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் எனும் மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்த நிலையில், இந்த ஆண்டும் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தின் காரணமாக தனது உயிரை அவர் மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என்று தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அந்த மாணவருக்கு அஞ்சலி செலுத்தி - அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டு முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாத அளவுக்கு கிராமப்புற - நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துவதால், மனமுடைந்து தனுஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தும் மிகப்பெரிய சிரமங்களைப் புரிந்து கொள்ளாத ஒன்றிய அரசின் அலட்சியமும், பிடிவாதமும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக வர வேண்டிய மாணவ - மாணவிகள் தற்கொலைக்கு காரணமாகத் தொடர்ந்து அமைந்து வருகிறது.

 
நீட் தேர்வில் முறைகேடு, கேள்வித்தாள் லீக், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளும், மாணவ - மாணவிகள் தற்கொலைகளும் ஒன்றிய அரசின் மனதை மாற்றவில்லை என்பது, கல்வி மாநிலப் பட்டியலுக்கு வந்தே தீர வேண்டும் என்ற அவசியத்தை மேலும் மேலும் வலுவடையவைக்கிறது.

இந்நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப் போராட்டம் இப்போது தொடங்குகிறது. நாளை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேற இருக்கிறது. இதனை இந்தியத் துணைக்கண்டத்தின் பிரச்சினையாக் கருதி அனைத்து மாநில முதலமைச்சர்களின் கவனத்துக்கும் கொண்டுச் சென்று ஆதரவு திரட்டி, வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad