எஸ்.பி.வேலுமணி லாக்கரில் அதிகாரிகள் நடத்திய சோதனை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 4, 2021

எஸ்.பி.வேலுமணி லாக்கரில் அதிகாரிகள் நடத்திய சோதனை!

எஸ்.பி.வேலுமணி லாக்கரில் அதிகாரிகள் நடத்திய சோதனை!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகள், அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அடுத்தடுத்து சோதனை மேற்கொண்டனர். எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோரை குறிவைத்து ரெய்டுகள் நடைபெற்றன.
அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள் லஞ்ச ஒழிப்புத்துறையால் வளைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியதால் அது முடிந்தபின்னரே ரெய்டுகள் நடைபெறும் என தகவல்கள் கசிந்தன. இதனால் மாஜி அமைச்சர்கள் நிம்மதியடைந்தனர்.

அதற்குள் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் வெளியாகி எடப்பாடி பழனிசாமியின் தூக்கத்தை கெடுத்தது. அது தொடர்பான வழக்குகள் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கிறது.
ஆனாலும் லஞ்ச ஒழிப்புத்துறை வேகத்தை குறைக்காமல் செயலாற்றி வருகிறது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களிலும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம் பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் காலை 6.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 10 அதிகாரிகள் குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். எஸ்.பி. வேலுமணி வீட்டில் நடந்த 11 மணி நேர சோதனையில், வங்கி

லாக்கர் சாவி கைப்பற்றப்பட்டது. இந்த சாவியை இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி குனியமுத்தூர் பகுதியில் எஸ்.பி.வேலுமணி கணக்கு வைத்துள்ள வங்கியில், லாக்கரை திறந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்துள்ளனர்.


No comments:

Post a Comment

Post Top Ad