பாஜக துண்டு போட்ட பள்ளி சிறுவனிடம் பாரதியார் பாட்டு: சர்ச்சையில் சிக்கிய நிர்மலா சீதாராமன்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 12, 2021

பாஜக துண்டு போட்ட பள்ளி சிறுவனிடம் பாரதியார் பாட்டு: சர்ச்சையில் சிக்கிய நிர்மலா சீதாராமன்!

பாஜக துண்டு போட்ட பள்ளி சிறுவனிடம் பாரதியார் பாட்டு: சர்ச்சையில் சிக்கிய நிர்மலா சீதாராமன்!

மகாகவி பாரதியார் மறைந்து நூறாண்டுகள் ஆகி விட்டன. அவரது 100ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் நாள், அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் 'மகாகவி நாளாக' கடைப்பிடிக்கப்படும். இதனையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்தி 'பாரதி இளங்கவிஞர் விருது' மாணவன் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி பிரதமர் தொடங்கி முதல்வர் ஸ்டாலின் வரை அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழகம் வந்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் இல்லத்தை பார்வையிட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது வாழ்வியலை விளக்கும் அரிய புகைப்படங்களை அவர்கள் அப்போது பார்வையிட்டனர். தொடர்ந்து, பாரதியார் வீட்டில் வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் நிர்மலா சீதாராமன் கையெழுத்திட்டார்

அதன்பிறகு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகாகவி பாரதியாரின் மேற்கோள் காட்டி பள்ளி மாணவர் ஒருவருக்கு ஊக்கமளித்தார். அது தொடர்பான வீடியோ வெளியாகி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் நிர்மலா ஊக்கமளிக்கும் பள்ளி மாணவருக்கு
பாஜக துண்டு அணிவிக்கப்பட்டிருப்பதுதான் சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளது.

முன்னரே திட்டமிடப்பட்டு பள்ளி மாணவருக்கு பாஜக துண்டை அணிவித்து கூட்டி வந்துள்ளனர் என்ற விமர்சனங்கள் முன் வைக்கப்படுகிறது. அத்துடன், பள்ளி செல்லும் சிறுவனுக்கு கட்சி துண்டை அணிவித்து பாரதியாரின் முற்போக்கான விழிப்புணர்வு பாடல்களை மேற்கோள் காட்டி ஊக்கமளித்ததும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad