பள்ளிக்கு வர வேண்டாம்: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு திடீர் அறிவுறுத்தல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 4, 2021

பள்ளிக்கு வர வேண்டாம்: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு திடீர் அறிவுறுத்தல்!

பள்ளிக்கு வர வேண்டாம்: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு திடீர் அறிவுறுத்தல்!

'காய்ச்சல், வாந்தி, பேதி உள்ளிட்ட கொரோனா அறிகுறி இருந்தால், பள்ளிகளுக்கு வர வேண்டாம்' என, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இதை அடுத்து, பள்ளி, கல்லூரிகளின் மாணவர்களின் நலன் கருதி, ஐந்து மாத இடைவெளிக்கு பின், கடந்த 1ம் தேதி முதல் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டு உள்ளன. பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை நேரடி வகுப்புகள் துவங்கி உள்ளன. கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

எனினும், பள்ளிகளுக்கு வருவதில் ஒரு சில மாணவர்களுக்கு தயக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது. பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்புவதில், பெற்றோர்களிடமும் தயக்கம் இருப்பதாகத் தெரிகிறது.

இதற்கிடையே, பள்ளி திறந்த முதல் நாளிலேயே, கடலூரில் பணிக்கு வந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதே போல, நாமக்கல் மாவட்டத்தில், 10ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால், பெற்றோர்கள் அச்சம் அடைந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் தரப்பில் வழங்கப்பட்டுள்ள புதிய அறிவுரை:
காய்ச்சல், வாந்தி, பேதி, இருமல், உடல் வலி, சோர்வு உள்ளிட்ட கொரோனா தொற்று அறிகுறிகள் தெரிந்தால், மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்; அருகில் உள்ள மருத்துவ மையங்களில் பரிசோதனை செய்து கொள்ளும்படி, அவர்களை அறிவுறுத்த வேண்டும்.

அதன்பின், தொற்று இல்லை என்று தெரிந்து உடல் நலம் தேறிய பின், பள்ளிக்கு வந்தால் போதும். மாணவர்களை பொறுத்தவரை பள்ளிக்கு வர வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆசிரியர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் 70 பள்ளிகளில், மொத்தம் 27 ஆயிரத்து 328 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அதில் 5 ஆயிரம் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என மாநகராட்சி வெளியிட்டுள்ள வருகை பதிவேடு மூலம் தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad