வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? ஈசியா ஆன்லைனில் தெரிஞ்சிக்கோங்க..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 4, 2021

வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? ஈசியா ஆன்லைனில் தெரிஞ்சிக்கோங்க..!

வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? ஈசியா ஆன்லைனில் தெரிஞ்சிக்கோங்க..!

புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை 9 மாவட்டங்களில் மட்டும் மாவட்ட மறுசீரமைப்பு காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை.
இந்த நிலையில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் அதன் பணிகள் கடந்த மாதத்தில் இருந்தே முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேற்கண்ட மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கடந்த மாதம் 31 இல் வெளியிட்டனர்.

வாக்காளர் இறுதி பட்டியல் வெளிவந்ததையடுத்து ஓரிரு நாட்களில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கான கூட்டம் 6ம் தேதி பிற்பகல் 12மணிக்கு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கண்ட 9 மாவட்டங்களை நீங்கள் சேர்ந்தவர்களாக இருந்தால் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை இணையம் மூலம் தெரிந்துகொள்ளலாம். அதற்கான வசதியை தமிழக தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் இறுதி பட்டியலை https://tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் சென்று சரிபார்த்து கொள்ளலாம்.

மேற்கண்ட லிங்கை கிளிக் செய்து ''தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் – 2021'' என்பதை தேர்வு செய்யவும். அதற்கு பிறகு உள்ளே நுழையும் பக்கத்தில் கேட்கப்படும் மாவட்டத்தின் பெயர், ஊராட்சி ஒன்றியத்தின் பெயர், கிராம ஊராட்சியின் பெயர் ஆகிய மூன்றையும் சரியாக தேர்வு செய்து உங்களது வார்டு எண்ணில் உள்ளடங்கிய வாக்காளர் பட்டியல் கிடைக்கப்பெறும்.

No comments:

Post a Comment

Post Top Ad